செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு ’ஆரியக்கூத்தாடினாலும்  காரியத்தில் கண்ணாயிருப்போம்’ மேனாள் துணைவேந்தர் பேராசிரியர்  சண்முகலிங்கன்

’ஆரியக்கூத்தாடினாலும்  காரியத்தில் கண்ணாயிருப்போம்’ மேனாள் துணைவேந்தர் பேராசிரியர்  சண்முகலிங்கன்

1 minutes read

அரியாலை, வெட்டுக்குளம் புவனேசுவரி அம்பாள் ஆலய மகோற்சவகால கல்வி,கலைப்போட்டிகளுக்கான பரிசளிப்பு வைபவம் கடந்த ஞாயிறு தேர்த் திருவிழா நாளில் இடம் பெற்றது. இவ்வைபவத்தில் முதன்மை விருந்தினர் உரையின் போது யாப்பாணப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி என். சண்முகலிங்கன்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தமது உரையில், திருவிழாக்கள் ,கொண்டாட்டங்கள்  சிறப்பாக  நடக்கின்ற அதேவேளையில் பிள்ளைகளின் கல்வி மற்றும்  கலைப் பயில்விலும் ஆலயங்களும் ,பெற்றோரும்  கவனம் கொள்வது அவசியமானது. ஆரியக்கூத்தாடினாலும்  காரியத்தில் கண்ணாயிருப்பது இன்றியமையாதது . இந்தவகையில்  அரியாலை புவனேசுவரி அம்பாள் ஆலய  சமூகத்தின்  பணி  முன்னோடியானது  . ஊரின் கல்வி , கலை  சாதனைகளை  கௌரவிக்கும்  இந்த வைபவத்துக்கான  அனுசரணையை வழங்கும் ஊரின் புலம்பெயர்  இத்திமரத்தாள் புத்திரர்களின் பண்பாட்டுணர்வு போற்றுதற்குரியது எனக் குறிப்பிட்டார்.

அறநெறி பாடசாலை ஆசிரியர்கள்,போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் ,இந்திய தொலைக்காட்சி ’சுப்பர் சிங்கர்’ புகழ்  செல்வி பிரியங்கா ஆகியோர்  முதன்மை விருந்தினரான பேராசிரியர் என். சண்முகலிங்கன், கலாநிதி கௌரி சண்முகலிங்கன்  ஆகியோரால் கௌரவிக்கப்பெற்றனர் .

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.