செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அல்லைப்பிட்டியில் புதர்களுக்கு தீ மூட்டிய விசமிகள் | சிலர் வைத்தியாலையில் அனுமதி

அல்லைப்பிட்டியில் புதர்களுக்கு தீ மூட்டிய விசமிகள் | சிலர் வைத்தியாலையில் அனுமதி

0 minutes read

அல்லைப்பிட்டி அலுமினிய தொழிற்சாலை பகுதி காணிகளில் காணப்பட்ட புதர்களுக்கு விசமிகள் தீ வைத்தமையால் வீதியால் மக்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக ஊர்காவற்றுறை – யாழ்ப்பாணம் வீதியின் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டதுடன், வீதியால் போக்குவரத்தில் ஈடுபட்ட மக்கள் சுவாசிக்க முடியாத நிலையும் ஏற்பட்டது.

மேலும் குறித்த புகை மூட்டத்தால் மோட்டார் சைக்கிளில் சென்ற சிலர் விபத்துக்குள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக பிரதேச சபை தவிசாளருக்கு அறியப்படுத்தியதை அடுத்து துரித நடவடிக்கை மேற்கொண்டதன் பிரகாரம் யாழ். மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு மாவட்ட மேலதிக அரச அதிபர் கை.சிவகரன் கள விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை அவதானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.