இந்திய உப ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனது உடல்நிலையை கருத்தில்கொண்டு, இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.
இராஜினாமா தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
மழைக்கால கூட்டத்தொடர் நேற்றுத் தொடங்கிய நிலையில், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
உப ஜனாதிபதியே மாநிலங்களவைத் தலைவராக செயல்பட வேண்டும். இந்நிலையில், மாநிலங்களவைத் தலைவர் பதவியில் இருந்தும் அவர் விலகியுள்ளார்.
இந்திய உப ஜனாதிபதி தன்கரின் இராஜினாமாவை ஜனாதிபதி முர்மு ஏற்றுக்கொண்டார் என்று உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடி பாராட்டு
தனது பதவியை இராஜினாமா செய்துள்ள உப ஜனாதிபதி ஜெகதீப் தன்கருக்கு இந்தியப் பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “இந்தியாவின் உப ஜனாதிபதி உட்பட பல்வேறு பதவிகளில் நமது நாட்டிற்கு சேவை செய்ய ஜெகதீப் தன்கருக்கு பல வாய்ப்புகளைப் பெற்றுள்ளார். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.