செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் பயிற்சியின் போது இராணுவம் ஏற்படுத்திய தீ பரவலுக்கு இழப்பீடு வழங்க இங்கிலாந்து அரசாங்கம் ஒப்புதல்!

பயிற்சியின் போது இராணுவம் ஏற்படுத்திய தீ பரவலுக்கு இழப்பீடு வழங்க இங்கிலாந்து அரசாங்கம் ஒப்புதல்!

0 minutes read

கென்யாவில் 2021ம் ஆண்டு நடந்த இராணுவ பயிற்சியின்போது இங்கிலாந்து இராணுவம் ஏற்படுத்திய தீ பரபலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க இங்கிலாந்து அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உள்ள வோல்டைகா வனப்பகுதி, இங்கிலாந்து கட்டுப்பாட்டில் உள்ளது.

அங்குள்ள ரிப்ட் பள்ளத்தாக்கில் 2021ஆம் ஆண்டு இங்கிலாந்து இராணுவ பயிற்சியை நடத்தியது.

அப்போது ஏற்பட்ட தீ மளமளவென அருகில் உள்ள பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதில் தனியாருக்குச் சொந்தமான சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் எரிந்து நாசமாகின.

அத்துடன், பலருக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள், கடந்த 4 ஆண்டுகளாக சட்ட போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இந்தத் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க இங்கிலாந்து அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தத் தீ பரபல் விபத்திற்குத் தாம்தான் காரணம் என இங்கிலாந்து இராணுவ வீரர்கள் ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.