சூடானின் டார்ஃபுர் பகுதியில் திடீரென ஏற்பட்ட மண்சரிவில் ஒரு கிராமமே புதையுண்டுள்ளது.
இதில் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மார்ரா மலைப் பிரதேசத்தின் தராசின் என்ற கிராமமே இந்த மண்சரிவில் அழிந்து போயுள்ளது. ஒரேயொருவரைத் தவிர, ஏனையவர்கள் மண்ணில் புதையுண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டோருக்கு உதவ ஐக்கிய நாடுகள் சபை முன்வந்துள்ளது.
சூடானின் டார்ஃபுரில் சூடான் அரசாங்கத்துக்கும் துணை இராணுவப் படையினருக்கும் இடையே உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இடைவிடாமல் பலத்த மழையும் பெய்கிறது.
வீடுகளிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மக்கள் மார்ரா மலைப் பகுதியில் தஞ்சமடைந்திருந்தனர்.
அண்மைக்கால சூடான் வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான மண்சரிவு இதுவாகும்.
சூடானுக்கு உதவ உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று சூடான் விடுதலை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.