செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் இடையேயான இருதரப்புப் பேச்சுவார்த்தை

ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் இடையேயான இருதரப்புப் பேச்சுவார்த்தை

1 minutes read

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகளுக்கிடையில் இன்று (14) முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.

இரு நாட்டு தலைவர்களும் பீஜிங்கில் உள்ள புகழ்பெற்ற சுவர்க்கக் கோவில் Temple of Heaven என்ற இடத்திற்குச் சென்றனர். அங்குதான் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தலம், மிங் வம்ச காலத்தில் வழிபாட்டிற்காகக் கட்டப்பட்டதாகும்.

மேற்படி சந்திப்பின்போது தைவான் விவகாரம் பற்றி பேசப்பட்டதா என ட்ரம்பிடம் கேள்வி எழுப்பட்டது. எனினும், அவர் நேரடி பதிலை வழங்கவில்லை.

எனினும், சந்திப்பு சிறப்பாக அமைந்தது என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளின் தலைவர்களுக்கு இடையேயான இந்த முக்கிய சந்திப்பிற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் தரப்பில் இருந்து வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ, பாதுகாப்புத்துறைச் செயலாளர் பீட் ஹெக்ஸெத், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர், கருவூலத்துறைச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் ஆகியோர் ஜனாதிபதியுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் சீனத் தரப்பு அதிகாரிகளின் பட்டியலை சீன ஊடகங்கள் இன்னும் வெளியிடவில்லை.

இரு நாடுகளுக்கும் இடையேயான தற்போதைய வர்த்தக உறவுகள், பாதுகாப்புப் பிரச்சினைகள் மற்றும் பிராந்திய அரசியல் சூழ்நிலைகள் ஆகியவற்றில் இந்தப் பேச்சுவார்த்தை கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.