தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றவுடன், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, இந்த அதிரடிப்படையின் முதல் பெண் ஐ.ஜி ஆக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த படையில் ஒரு பொலிஸ் சூப்பிரண்டு, 2 துணை பொலிஸ் சூப்பிரண்டுகள் மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 30க்கும் மேற்பட்ட பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அதிரடிப்படையில் இடம்பெறும் பெண் பொலிஸ் மற்றும் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு நீல நிற சட்டை, காக்கி நிற பேண்ட் என சிறப்பு சீருடை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், கருப்பு நிற தொப்பியும் கருப்பு நிற ஷூ-வும் வழங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை கடந்த 29ஆம் திகதியன்று முதலமைச்சர் விஜய் தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களுக்காக கடைசி நேரத்தில் இந்த நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை முதலமைச்சர் விஜய் நாளை செவ்வாய்க்கிழமை (09) மாலை 5 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இதற்கான விழா சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
சென்னையில் இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தவுடன், ஒவ்வொரு மாவட்டத்திலும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பொலிஸார் தங்கள் பணியை தொடங்கவுள்ளனர்.