செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்ட விமானம் மீது பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது!

கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்ட விமானம் மீது பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது!

1 minutes read

கட்டுநாயக்காவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட டர்கிஷ் ஏர்லைன்ஸ் விமானம், பறவை மோதிய காரணத்தால் மீண்டும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.

இன்று சனிக்கிழமை (11) காலை 7:07 மணியளவில், TK-731 என்ற விமானம் 246 பயணிகளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. விமானம் அதிக உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது அதன் மீது பறவை மோதியதாகத் தெரிவிக்கப்பட்டது.

விமானம் ஏர்பஸ் A330-300 ரகத்தைச் சேர்ந்தது என்பதால், அதில் எரிபொருளை வெளியேற்றும் வசதி இல்லை. இதனால், பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்குத் தேவையான எடையைக் குறைப்பதற்காக, விமானம் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீர்கொழும்பு கலப்புப் பகுதியில் வட்டமிட்டு எரிபொருளை எரித்தது.

இந்த அவசரத் தரையிறக்கத்தின் போது விமான நிலைய அவசரக்கால சேவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. விமானம் முழுமையாகக் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த விமானம் மீண்டும் தரையிறங்குவதற்காக வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்தபோது, Flightradar24 இணையதளத்தில் உலகிலேயே அதிக மக்களால் பின்தொடரப்பட்ட விமானமாக இது இருந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.