செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் உள்துறையிலிருந்து நிதித்துறைக்கு ஷபானா மஹ்மூத்? – இங்கிலாந்து அமைச்சரவையில் அதிரடி மாற்றம்!

உள்துறையிலிருந்து நிதித்துறைக்கு ஷபானா மஹ்மூத்? – இங்கிலாந்து அமைச்சரவையில் அதிரடி மாற்றம்!

1 minutes read

இங்கிலாந்து அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழவுள்ள நிலையில், தற்போதைய உள்துறைச் செயலராக பணியாற்றி வரும் ஷபானா மஹ்மூத், நாட்டின் அடுத்த நிதி அமைச்சராக (Chancellor) பதவி உயர்வு பெறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கிரேட்டர் மான்செஸ்டரின் மேயராக இருந்த ஆன்டி பர்னாம், லேபர் கட்சியின் புதிய தலைவராகவும் இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகவும் பொறுப்பேற்க உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த திங்கட்கிழமை ஆன்டி பர்னாம் பிரதமராக பதவியேற்கவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர் தனது புதிய அமைச்சரவையில் பல முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைக்காலமாக இங்கிலாந்தின் புலம்பெயர்தல் மற்றும் எல்லைப் பாதுகாப்பு கொள்கைகளில் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து கவனத்தை ஈர்த்த உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூதுக்கு, நிதி அமைச்சரின் பொறுப்பு வழங்கப்படலாம் என Financial Times பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஆன்டி பர்னாமுக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட அந்தச் செய்தியில், புதிய அரசின் பொருளாதார அணியை மறுசீரமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஷபானா மஹ்மூதுக்கு இந்த முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

புலம்பெயர்தல் கொள்கைகளால் கவனம் பெற்ற ஷபானா

உள்துறைச் செயலராக இருந்த காலத்தில், சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்துதல், எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், புகலிடக் கோரிக்கைகளில் கடுமையான நடைமுறைகளை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகளை ஷபானா மஹ்மூத் முன்னெடுத்திருந்தார். இதனால் அவர் ஆதரவையும் விமர்சனங்களையும் ஒருசேர பெற்றிருந்தார்.

பொருளாதார அனுபவம் குறித்த கேள்விகள்

இந்நிலையில், அவருக்கு நிதி அமைச்சரின் பொறுப்பு வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளதையடுத்து, அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளும் எழுந்துள்ளன.

குறிப்பாக, உள்துறை மற்றும் புலம்பெயர்தல் தொடர்பான துறைகளில் அனுபவம் பெற்றிருந்தாலும், பொருளாதாரக் கொள்கைகள், வரிவிதிப்பு, அரசின் செலவினங்கள் மற்றும் நிதி நிர்வாகம் போன்ற துறைகளில் ஷபானாவுக்கு போதுமான அனுபவம் இல்லை என சில அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

புதிய அரசின் முதல் சவால்

சர் கெய்ர் ஸ்டார்மரின் தலைமையிலான அரசுக்கு பொருளாதார மேலாண்மை குறித்த விமர்சனங்கள் அதிகரித்திருந்த சூழலில், புதிய பிரதமராக பொறுப்பேற்கவுள்ள ஆன்டி பர்னாம் தனது அமைச்சரவை மூலம் புதிய பொருளாதார திசையை உருவாக்க முயற்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.