செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் வயோதிபர்களுக்கான அரசு வழங்கவிருந்த டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் ரத்தாகுமா?

வயோதிபர்களுக்கான அரசு வழங்கவிருந்த டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் ரத்தாகுமா?

1 minutes read

இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள ஆண்டி பர்ன்ஹாம், வயோதிபர்களுக்கான அரசு வழங்கவிருந்த டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை ரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

நாளை திங்கள்கிழமை பிரதமராகப் பதவியேற்றவுடன் அவர் எடுக்கவுள்ள முதல் முக்கிய கொள்கை முடிவுகளில் இதுவும் ஒன்றாகும்.

மக்களின் அன்றாட முன்னுரிமைகளான வாழ்வாதாரச் செலவுகளை சமாளிக்க உதவுவதில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக இந்தத் திட்டம் கைவிடப்படுகிறது.

இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டிருந்த காலமும், பொது வளங்களும் இனி மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், உள்ளூர் பொருளாதாரங்களை வலுப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் என்று பர்ன்ஹாமின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் ஐடியை ரத்து செய்வதன் மூலம் மிச்சமாகும் கணிசமான நிதி, பிற முக்கியத் தேவைகளுக்கு மாற்றியமைக்கப்படும் என்று தொழிலாளர் கட்சியின் துணைத் தலைவர் லூசி பவல் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் முதலில் சர் கீர் ஸ்டார்மரால் முன்மொழியப்பட்டது. சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், குடிமக்கள் அரசுச் சேவைகளை எளிதாக அணுகவும் இது உதவும் என்றும் அவர் வாதிட்டார்.

இருப்பினும், சுமார் 30 லட்சம் மக்கள் இதற்கு எதிராக மனுவில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, இத்திட்டம் கட்டாயமாக்கப்படுவதிலிருந்து மாற்றப்பட்டு, விருப்பத்தின் பேரிலான ஒன்றாகக் குறைக்கப்பட்டது.

இந்தத் திட்டத்துக்கு மூன்று ஆண்டுகளில் சுமார் £1.8 பில்லியன் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.

டிஜிட்டல் ஐடியை ரத்து செய்வதுடன், வட கடலில் புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு துளையிடும் திட்டங்களை பர்ன்ஹாம் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏற்கெனவே உள்ள உரிமைகளை மதிக்கும் தொழிலாளர் கட்சியின் தேர்தல் அறிக்கையின் வாக்குறுதியைப் பின்பற்றும் ஒரு நடைமுறை அணுகுமுறையாகக் கருதப்படுகிறது.

கன்சர்வேடிவ் கட்சியின் பிரதி தொழில்நுட்பச் செயலர் ஜூலியா லோபஸ், தொழிலாளர் கட்சி ஏற்கெனவே இந்தத் திட்டத்தில் மில்லியன் கணக்கான பவுண்டுகளை வீணடித்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியினர் இந்த முடிவை வரவேற்றுள்ளனர், மக்கள் இனி தங்கள் தரவுகளைக் கட்டாயமாக வழங்க வேண்டியதில்லை என்பதால் நிம்மதி அடைவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.