செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு அந்த இறுதி நொடியில் நீ | நதுநசி

அந்த இறுதி நொடியில் நீ | நதுநசி

1 minutes read

வார்த்தை வரவில்லை
வழிமொழிந்து; – உனது
அன்பை நான் ஏற்றுவிட.;
ஆனாலும் அழுகிறேன்.

ஆனந்த கண்ணீர் சிந்தி
நிலத்தை நான் நனைக்காது
விம்மி மனதில் புதைந்த
சோகத்தைக் கரைக்கின்றேன்.

பழகிய நாட்கள் எல்லாம்
பாழாகிப் போனபின்னே
பாடல்செதுக்கி இசைத்திட
மனதின் பாரம் குறைகிறது.

தலைசாய்ந்து உன் தோளில்
ஒரு நொடியேனும் தூங்கிட
ஆசை இருக்கிறது மனதில்.
நடந்துவிடாது எனத்தெரிந்தும்.

பகைவர் நமைத் தேடியலைந்து
கொன்றுவிட நினைத்த போதும்
அவர் காலடியில் பதுங்கி அன்று
அவர் தூங்கம் தொலைத்த போது

நேரம் பகிர்ந்து தூங்கிய
அன்றைய நாட்களை இன்று
எண்ணிக் கொள்கிறேன்.
மறந்திட முடியாத நினைவுகளாய்.

பிரிந்திடல் நிச்சயம் என்று
நன்றே தெரிந்த போதும்
பிரித்திட முடியாத அன்பை
பகிர்ந்து பழகியது விந்தையே!

நெஞ்சுரம் கொண்ட நம்மை
நாட்டுக்கான நடைபாதையில்
தடைகண்டு உடைத்திடத் தானே
தலைவர் அனுப்பி வைத்தார்.

தந்த கட்டளை விலகாது
தகர்த்தெறிந்து வாகை சூடிய
நம்மை எண்ணித் தவைவர்
வியந்து பாராட்டிய நேரங்கள்.

பற்பல நினைவுகள் மனதில்
மலர்ந்து பரந்து மணம் வீசிட
அந்த இறுதி நொடியில் நீ
நெஞ்சில் வாங்கிட சூட்டோடு.

விழிமூடி மண்ணை நீ
முத்தமிட்ட நொடிகளும்
மனதில் மலர்ந்து கனத்திட
கண்கள் கசிந்து நீர் சொரிய.

நடைப்பிணமாக இன்று நான்
பகைவர் நடமாடும் நம்
தாயக மண்ணில் வாழ்கிறேன்.
உன் நினைவுகள் மீண்டுவர.

நதுநசி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.