செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் கனடா பூங்காவில் இளம் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்; இந்திய வம்சாவளி நபர் ஒருவர் கைது

கனடா பூங்காவில் இளம் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்; இந்திய வம்சாவளி நபர் ஒருவர் கைது

1 minutes read

கனடாவில் உள்ள பூங்காவில் இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில், இந்திய வம்சாவளி நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கனடாவின் சர்ரே சிட்டி பகுதியில் உள்ள பியர் கிரீக் பூங்காவில் இளம் பெண்ணை ஒருவரை நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இது தொடர்பாக அந்த பெண், பொலிஸில் அளித்த முறைப்பாட்டின் பேரில் வழக்குப் பதிவானது.

அந்த பெண், சர்ரே பொலிஸாரிடம் அளித்த முறைப்பாட்டில், சந்தேகத்துக்குரிய அந்த நபர் 5 அடி 8 அங்குல உயரம் கொண்ட தெற்காசியாவை சேர்ந்தவர் ஆவார். அவர், தலையில் நீல நிற குல்லாவுடன், கருப்பு நிறத்தில் டி-ஷர்ட், பேண்ட் அணிந்து கொண்டு காணப்பட்டார் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சந்தேகத்துக்குரிய நபரின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டு அவரை பற்றிய தகவலை அளிக்கும்படி பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டனர். இந்நிலையில், அந்நபர் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டார்.

அவர், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜகேந்தர் குரானா என தெரிய வந்துள்ளது. அவர் பிணை மனு தாக்கல் செய்த நிலையில், அது பற்றி விசாரணை நடைபெற உள்ளது. எனினும், இந்த வழக்கில் பொலிஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.