தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான ஜெய் முதன்மையான வேடத்தில் நடிக்கும் #AGS29 படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் எம். எஸ். ஆனந்தன் இயக்கத்தில் உருவாகும் இந்த பெயரிடப்படாத திரைப்படத்தில் ஜெய், பிரியங்கா மோகன், நாசர், யோகி பாபு, ரமேஷ் திலக், ராஜுவ் மேனன், சுந்தர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார்.
திரில்லராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஏ ஜி எஸ் என்டர்டெய்ன்மென்ட் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இத்திரைப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசராக அர்ச்சனா கல்பாத்தி பொறுப்பேற்றிருக்கிறார்.
விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் பாரிய வெற்றிகளை குவிக்கும் திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் 29 ஆவது திரைப்படம் திரில்லர் ஜேனரில் தொடங்கி இருப்பதால், இந்தத் திரைப்படமும் வெற்றி பெறும் என திரையுலக வணிகர்கள் அவதானித்திருக்கிறார்கள்.