கடந்த 25 வருடங்களாக பிரித்தானியாவில் இயங்கிவரும் தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் இவ்வாண்டு அதன் வெள்ளி விழாவினை கொண்டாடுகின்றது.
நேற்றைய தினம் லண்டன் கரோ பகுதில் நடைபெற்ற நிகழ்வில் சுமார் 600 பேர்வரை கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் அங்கம் வகிக்கும் பாடசாலைகளின் பழைய மாணவர் சங்க தலைவர்கள், தோற்றுவாய் உறுப்பினர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் என சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து மங்கள விளக்கினை ஏற்றிவைத்தனர்.
இச் சங்கத்தின் வளர்ச்சிக்கு நீண்ட கால ஆதரவு மற்றும் ஆலோசனைகள் வழங்கி வருபவரும் நொட்டின்காமின் நகரொன்றின் முன்னாள் நகர பிதாவுமான டாக்டர் இராச்சந்திரன் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டார்.
சங்கத் தலைவர் ஜோய் பூரணச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வுக்கு சுபரா நிறுவனம் அனுசரனை வழங்கியிருந்தது.
