செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிளிநொச்சி ஆலயங்களில் இரவில் திருட்டு 

கிளிநொச்சி ஆலயங்களில் இரவில் திருட்டு 

1 minutes read

கிளிநொச்சி முரசுமோட்டை சேற்றுக்கண்டி பகுதியில் இரண்டு இந்து ஆலயங்களில் திருட்டு சம்பவம் இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள அம்மன் கோவிலில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதுடன், கோவிலில் இருந்த விக்கிரகமும் சூரையாடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பல தடவைகள் இவ்வாறு திருட்டு சம்பவம் கோவிலில் இடம்பெற்றுள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை குறித்த பகுதியில் அமைந்துள்ள முருகன் ஆலயத்திலும் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது, அங்கிருந்து முருகனின் வேல் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More