சாலையின் நடுவே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென கவிழ்ந்தது. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் லாரியில் இருந்து பெட்ரோல் கசிந்து சாலையில் ஓடியதால் அங்கு தீப்பிடித்தது.
கொழுந்துவிட்டு எரிந்த தீ அருகில் இருந்த வாகனங்களுக்கும் மளமளவென பரவியது. இத் தீயின் கோரப்பிடியில் சிக்கி 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர்.
மேலும் பலர் பலத்த காயம் அடைந்தனர். 5 பஸ்கள் உள்பட 50–க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகி உருக்குலைந்துபோயின.
