செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவில் பேருந்து விபத்தில் 47 பேர் ஸ்தலத்திலேயே பலி!

இந்தியாவில் பேருந்து விபத்தில் 47 பேர் ஸ்தலத்திலேயே பலி!

0 minutes read

 

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் வீதியோரம் உள்ள பள்ளத்தாக்கில் இன்று(01) பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 47 பேர் ஸ்தலத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பௌன் பகுதியில் இருந்து ராம்நகர் பகுதிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

சுமார் 60 அடி ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில், இதுவரை 47 பயணிகள் வரை உயிரிழந்துள்ளதாகவும், 12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விபத்து பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதால் உயிரிழந்தோர் அல்லது காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.