வாள்வெட்டு குழுவுடன் ஈடுபட்டதாக கூறப்பட்டு யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்குமாறு சட்டத்தரணியும், தமிழரசு காட்ச்சியின் வடமாகாண சபை உறுப்பினருமான கே.சயந்தன் கோரியுள்ளார்.
யாழ் சாவகச்சேரியில் கைது செய்யப்பட்ட 7 இளைஞர்களையும் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்று உத்தரவிட்டிருந்தது.
7 இளைஞர்களை நேற்றுமுன்தினம் மானிப்பாய் பொலிஸார் கைது செய்திருந்தனர். அத்துடன் அவர்களிடமிருந்து 2 வாள்கள், ஒரு கோடாரி, ஒரு கைக் கோடாரி, செயின், இரும்புப் பைப், 3 உந்துருளிகளை மீட்டதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த இளைஞர்களை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் சட்டத்தரணியும், மாகாண சபை உறுப்பினருமான கே.சயந்தன் இளைஞர்கள் சார்பில் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி இருந்தார்.
விசாரணைகளின் பின்னர் இன்று 06.08.2018 வாள்வெட்டு குழுவுடன் தொடர்புபட்ட இளைஞர்களை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். இளைஞர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சட்டத்தரணி சயந்தன், அவர்களைப் பிணையில் விடுவிக்குமாறு கோரியுள்ளார். எனினும் அவரது பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு 14 நாடகள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.