இந்தோனேசியாவில் பூகம்பம் ஏற்பட்டு ஒரு வாரம் ஆகியும் மீட்பு பணி இன்னும் முடியவில்லை. இடிபாடுகளில் இருந்து தொடர்ந்து சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 387 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியாவில் லோம்போக் தீவில் கடந்த 5 ஆம் திகதி 6.9 ரிக்டரில் பூகம்பம் ஏற்பட்டது.
அதில் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்தன. இடிபாடுகளை அகற்றும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பலி எண்ணிக்கை 387 ஆக உயர்ந்துள்ளது. 13 ஆயிரம் பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.