செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலங்கையில் பெண்களுக்கு பிரத்தியேக பஸ் சேவை

இலங்கையில் பெண்களுக்கு பிரத்தியேக பஸ் சேவை

0 minutes read

இலங்கையில் பெண்களுக்கு பிரத்தியேக பஸ் சேவையொன்றை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக, அந்நாட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 2 வாரங்களில் இதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக, அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான 25 முதல் 30 பஸ்களை ஈடுபடுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த பஸ் சேவையானது, தெரிவுசெய்யப்பட்ட நகரங்களிலும் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அலுவலக நேரங்களில் இந்த பஸ்கள் சேவையில் ஈடுபடவுள்ளன. பெண்கள் மீதான துஷ்பிரயோக நடவடிக்கைகள் காரணமாகவே இந்த பஸ் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.