செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா இடைவிடாது ஜனாதிபதி பணி செய்கிறேன்-அமெரிக்கா ஜனாதிபதி

இடைவிடாது ஜனாதிபதி பணி செய்கிறேன்-அமெரிக்கா ஜனாதிபதி

1 minutes read

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை புரட்டி எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கையிலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளாகி இதுவரை 57 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும், உயிரிழப்பை குறைக்கவும் அமெரிக்கா தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தினம் தோறும் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வண்ணம் இருந்தார்.
ஆனால் தனது அரசாங்கத்துக்கு விரோதமான கேள்விகளை கேட்பதிலேயே ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுப்பதால் வெள்ளை மாளிகையில் நடைபெற்றுவந்த கொரோனா வைரஸ் தொடர்பான செய்தியாளர் சந்திப்பை அமெரிக்கா ஜனாதிபதி ரத்து செய்தார்.

இதற்கிடையில், அமெரிக்காவின் பிரபல நாளிதழான நியூயோர்க் டைம்ஸில் பத்திரிகையில் வெளியான செய்தியில், அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காலை மற்றும் மாலை வேலைகளில் வெள்ளை மாளிகையிலுள்ள மிகப்பெரிய படுக்கையறையில் இருந்து கொண்டும், உணவு சாப்பிடும் அறையில் விஷேசமாக தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிட்டுக்கொண்டும், நாள் முழுவதும் TVயை பார்த்து தனது நேரத்தை கழிப்பதாக குற்றச்சாட்டப்பட்டது.

இந்நிலையில், நியூயோர்க் டைம்ஸ் நாளிதழில் வெளியான செய்திக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

”நான் அதிகாலை முதல் நள்ளிரவு வரை ஜனாதிபதி பணியை செய்து வருகிறேன். வியாபார ஒப்பந்தம், ராணுவ கட்டமைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளியே சென்றதை தவிர பிற காரணங்களுக்காக நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியே சென்று பல மாதங்களாகிவிட்டது.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் எனது அலுவலக வேலைகள் குறித்தும் எனது உணவு முறை குறித்தும் எழுதப்பட்டிருந்த கட்டுரையை நான் படித்தேன். அது என்னைப்பற்றி எந்த ஒரு தகவலும் தெரியாத ஆசிரியரால் எழுதப்பட்டுள்ளது’’ என்றார்.

அவர் வெளியிட்டுள்ள மற்றொரு டுவிட்டர் பதிவில், ”என்னையும், அமெரிக்காவின் வரலாற்றையும் தெரிந்த மக்கள் நான் தான் மிகவும் கடுமையாக உழைக்கும் ஜனாதிபதி என்று கூறுகிறார்கள். அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

ஆனால் நான் ஒரு கடுமையான உழைப்பாளி. அமெரிக்க வரலாற்றில் மற்ற ஜனாதிபதிகள் செய்ததை விட கடந்த 3½ வருடங்களில் நான் சிறப்பாக செயல்பட்டுள்ளேன்’’ என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.