கற்பகா திட்டத்தின் கீழ் வட்டக்கச்சி பிரதேசத்தில் பயன்தரும் மரங்கள் நடப்பட்டன. தாயக நிலங்களில் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்கள் நடும் கிளி பீப்பிள் மற்றும் கிளி சமூக அபிவிருத்தி பேரவையின் திட்டத்தின்கீழ் பத்தாவது கட்டமாக இன்று வட்டக்கச்சி வைத்தியசாலை, வட்டக்கச்சி மத்திய கல்லூரி மற்றும் லக்கி ஸ்டார் விளையாட்டுக்கழக மைதானம் ஆகிய சூலில் பயன்தரும் மரங்கள் நடப்பட்டன.
பலதரப்பட்ட உள்ளூர் அமைப்புகள் இணைந்து இந்த மர நடுகைகளை முன்னெடுத்திருந்தன. பாடசாலை சமூகங்கள், கமக்கார அமைப்புக்கள், லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகம், ஐக்கிய நற்பணி மன்றம், ரோட்டரி கழகம் ஆகிய அமைப்புகள் இன்றைய நிகழ்வில் கலந்துகொண்டிருந்தன.
கடந்த இரண்டு மாதமாக கிளி பீப்பிள் முப்பதுக்கும் மேற்பட உள்ளூர் அமைப்புக்களுடன் இணைந்து தாயக நிலங்களில் பனம் விதைகள் மற்றும் பயன் தரும் மரங்களை நட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.






























