செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா குடியரசு தினத்தில் பேரணி நடத்தப்போவதாக விவசாயிகள் எச்சரிக்கை!

குடியரசு தினத்தில் பேரணி நடத்தப்போவதாக விவசாயிகள் எச்சரிக்கை!

0 minutes read

மத்திய அரசுடன் நாளை நடத்தவுள்ள பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் குடியரசு தினமான ஜனவரி 26ஆம் திகதி டெல்லியை நோக்கி டிராக்டர்களில் பேரணி நடத்தப்போவதாக மத்திய அரசுக்கு விவசாய சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

குடியரசு தினத்தின் சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ராஜபாட்டையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளார்.

இந்த நிலையில் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக விவசாயிகளின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கான ஒப்புதலை மத்திய அரசு அளிக்கவில்லை என்றும் குறைந்தபட்ச அடிப்படை ஆதார விலை குறித்த உறுதிமொழியை சட்டமாக்க முயற்சிக்கவில்லை என்றும் விவசாயிகள் மத்திய அரசின் மீது குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் கடும் குளிரிலும் பனியிலும் இன்று 39ஆவது நாளாக விவசாயிகளின் போராட்டம் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.