சமீபத்தில் முரட்டு சிங்கள் இயக்கத்தில் யோகிபாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் பப்பி படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. இதனை தொடர்ந்து சிவசேனா அமைப்பை சேர்ந்த செல்வம் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதில், அமெரிக்காவில் முழு நீல நிர்வாண படங்களில் நடிக்கும் ஜானி சின்ஸ் என்பவரையும் இந்து மத பிரசாரங்கள், போதனைகள் வழங்கும் சுவாமி நித்யானந்தாவையும் இணைத்து பப்பி படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இது இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையிலும், இளைஞர்கள் மனதில் வக்கிர எண்ணங்களை ஏற்படுத்தும் விதத்திலும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சர்ச்சைக்குரிய காட்சிகளை வெளியிட்டுள்ள படக்குழுவினர், இயக்குநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிய பின்னரே திரைப்படத்தினை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.