சூர்யாவின் படங்களில் வாணி போஜன்.

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான வாணி போஜன், ‘ஓ மை கடவுளே’ படம் மூலம் சினிமாவுக்கு வந்தார். அந்த படத்தில் வாணி போஜன் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. பட வாய்ப்புகளும் வந்தன. தற்போது விக்ரம் பிரபு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதன் படப்பிடிப்பை கொரோனா ஊரடங்கு முடிந்ததும் தொடங்க உள்ளனர்.

இதுபோல் சூர்யா தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்கவும் தேர்வாகி உள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சத்தில் இந்த படங்கள் தயாராக உள்ளன. ஏற்கனவே வைபவ் உடன் ‘லாக்கப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் இயக்குனர் வெங்கட் பிரபு வில்லனாக வருகிறார். இந்த படத்தை மே மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். ஆதவ் கண்ணதாசனுடன் பேய் படம் ஒன்றிலும் நடித்துள்ளார். இதுபோல் விதார்த் தயாரித்து நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக வருகிறார்.

இன்னொரு புறம் வெப் தொடர்களிலும் நடிக்கிறார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகும் வெப் தொடரில் ஜெய் ஜோடியாக நடித்து வருகிறார். இதன் பட வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் வெப் தொடரில் நடிக்கவும் வாணி போஜனிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த தொடரை முருகதாசின் துணை இயக்குனர் டைரக்டு செய்வதாக கூறப்படுகிறது.

ஆசிரியர்