“என் மனைவியை இப்படி தான் நடத்துவேன்” :சிம்பு

சிம்புவுடன் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் விடிவி கணேஷ். தயாரிப்பாளர் மற்றும் நடிகராக வலம் வரும் இவர் சிம்புவின் நட்பு வட்டாரத்தில் முக்கியமானவர். இந்நிலையில் ஊரடங்குக்கு முன்னர் இருவரும் இணைந்து எடுத்த வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.

அதில், சிம்பு, சமையல் செய்து கொண்டே விடிவி கணேஷ் உடன் உரையாடுகிறார். அப்போது, வரப்போற பொண்ணுக்கு வேலையே இல்லாம பண்ணிடுவிங்க போல இருக்கே என்று விடிவி கணேஷ் கேட்க, என்னை கல்யாணம் செய்து கொண்டு வரும் பெண் வேலை செய்வதற்கா வராங்க. அவங்க என்ன வேலைக்காரங்கனு நினைச்சீங்களா, அதெல்லாம் உங்க காலம் என்று பதில் கூறுகிறார்.

மேலும் சிம்பு பேசும் போது, பெண்களை வேலைக்காரி மாதிரி நடத்தக்கூடாது. அவர்கள் விரும்பினால் சமையல் செய்யலாம். என் மனைவிக்காக சமையல் செய்வேன். எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பேன் என்றும் நான் உங்களை மாதிரி அல்ல என்றும் விடிவி கணேஷிடம் கூறுகிறார்.

ஆசிரியர்