விஷால் கொரோனாவால் மீண்ட மருந்து இவை தான்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சினிமா பிரபலங்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்தவகையில் விஷாலும், அவரது தந்தை ஜி.கே.ரெட்டி மற்றும் விஷாலின் உதவியாளர் ஹரி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரே வாரத்தில் குணமடைந்தனர். மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமானதாக விஷால் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தாங்கள் பயன்படுத்திய மருந்தின் விவரங்களை வெளியிட்டுள்ள விஷால், பலர் கேட்டு கொண்டதற்கு இணங்க அதனை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவரின் ஆலோசனை பெற்று இந்த மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என்றும், அனைத்து ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி மருந்தகங்களில் இது கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்