செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நான் நாட்டின் சக்தி வாய்ந்த பெண் | கங்கனா ரணாவத்

நான் நாட்டின் சக்தி வாய்ந்த பெண் | கங்கனா ரணாவத்

1 minutes read

டுவிட்டர் விதிகளை மீண்டும் மீண்டும் மீறியதற்காக கங்கனாவின் டுவிட்டர் கணக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிரந்தரமாக முடக்கப்பட்டது.

நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைதளத்தில் தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் அந்த சட்டங்களுக்கு எதிராக போராடியவர்களை காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்று விமர்சித்தார். இதையடுத்து கங்கனா மீது சீக்கிய அமைப்பினர் போலீசில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், இதுகுறித்து போலீசில் புகார் அளித்து இருப்பதாகவும் கங்கனா தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதள பக்கத்தில் கங்கனா வெளியிட்டுள்ள பதிவில்,

‘‘மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிர் இழந்தவர்களை நினைவுகூரும் வகையில், துரோகிகளை மன்னிக்க கூடாது என்று எழுதினேன். உள்நாட்டு துரோகிகள் பணத்துக்காக தேசவிரோத சக்திகளுக்கு உதவி செய்ததே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என்று பதிவிட்டேன்.

இந்த பதிவுக்காக தீய சக்திகளிடம் இருந்து எனக்கு மிரட்டல்கள் வருகின்றன. ஒருவர் என்னை கொலை செய்யப்போவதாக மிரட்டியுள்ளார். இத்தகைய மிரட்டல்களுக்கு நான் அஞ்ச மாட்டேன். நாட்டுக்கு எதிரான சதி செயல்களில் ஈடுபடுகிறவர்கலை பற்றி தொடர்ந்து பேசுவேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்நிலையில், கங்கனா ரணாவத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்காமல் இருந்திட கங்கனாவின் சமூக வலைதள பதிவுகளை தணிக்கை செய்து வெளியிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் குறித்தும் அவர்கள் போராட்டம் குறித்தும் நடிகை கங்கனா கூறிய சர்ச்சை கருத்துக்கள் தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள புகாரில், இன்னும் ஆறு மாதங்களுக்குள் அவர் மீது முறையாக குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தன் மீதான இந்த மனுவை தொடர்ந்து, நடிகை கங்கனா ரணாவத் ‘நாட்டின் சக்தி வாய்ந்த பெண்’ என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்டுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் விதிகளை மீண்டும் மீண்டும் மீறியதற்காக கங்கனாவின் டுவிட்டர் கணக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிரந்தரமாக முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.