March 24, 2023 4:17 pm

தசாவதாரம்-2’க்கு வாய்ப்பே இல்லை|கே.எஸ்.ரவிக்குமார்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

அண்மையில் வெளியாகியிருக்கும் கூகுள் குட்டப்பா படத்தின் தயாரிப்பாளரும் அதன் முன்னணி கதாபத்திரத்தில் நடித்தவருமான கே.எஸ்.ரவிக்குமார், அப்படத்தின் நாயகன் தர்ஷன் நாயகி லாஸ்லியா ஆகியோருடன் சென்னை, திருப்போரூரில் உள்ள எஸ்.எஸ்.என்.கல்லூரியின் கலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.

‘கூகுள் குட்டப்பா’ மிக விரைவில் ஆஹா ஓ.டி.டி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ள நிலையில் கல்லூரி நிர்வாகத்துடன் சேர்ந்து ஆஹா ஓ.டி.டி தளம், இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. 

இந்த விழாவில் கே.எஸ்.ரவிகுமார் பேசியதாவது, கமல் எப்போதும் கடினமான உழைப்பை நம்பக்கூடியவர். வலி இல்லாமல் வெற்றி இல்லை என்பது அவரது பாலிசி.

தசாவதாரம் படத்துக்கும் அப்படித்தான் உழைத்தார். சில தினங்களுக்கு முன் தசாவதாரம் ரிலீசாகி 12 வருஷம் ஆச்சா? என்று ஆச்சரியத்துடன் 2 மணி நேரம் பேசினார்.

சில வருடங்களாகவே கமலையும் என்னையும் பார்த்து ‘தசாவதாரம் 2’ எப்போது என்று கேட்கிறார்கள். ஆனால் எங்கள் இருவருக்கும் எத்தனை கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் தசாவதாரம் போன்ற இன்னொரு படத்தை உருவாக்கவே முடியாது.

எனவே தசாவதாரம்-2’க்கு வாய்ப்பே இல்லை. ஓ.டி.டி. தளங்களால் சினிமாவுக்குப் பாதிப்பா இல்லையா என்பது குறித்தெல்லாம் விவாதிக்க வேண்டியதில்லை.

தொலைக்காட்சி வந்தபோதும் இப்படித்தான் சினிமாவே அழிந்துவிடும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். சினிமாவை திரையரங்கில் பார்க்கும் அனுபவத்துக்கு எதுவும் ஈடாகாது.

அதே சமயம் ஓ.டி.டி என்பது இன்னொரு விஞ்ஞான வளர்ச்சி என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அண்மையில் வெளியான எங்கள் ‘கூகுள் குட்டப்பா’வை திரையரங்குகளுக்குச் சென்று பாருங்கள்.

அப்படிப் பார்க்க தவர்கள் விரைவில் வெளி யிடப்பட இருக்கும் ஆஹா ஓ.டி.டி. தளத்தில் பாருங்கள் என்று கூறினார். 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்