பல கோடி சம்பளம் கேட்ட தனுஷ் | தயாரிப்பாளருக்கு நெஞ்சுவலி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் ஹாலிவுட் வரை சென்ற தென்னிந்திய நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படத்திற்கு பிறகு வாத்தி, கேப்டம் மில்லர், ஆயிரத்தில் ஒருவன் 2 உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் தனுஷ்.

இந்நிலையில் எப்போதும் தனுஷ் பெரிய படம் என்றாலே 30 கோடிக்கு மேல் சம்பளத்தை கேட்கமாட்டார். ஆனால் இயக்குனர் எலன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க தனுஷ் ஒப்புக்கொண்டுள்ளாராம்.

அப்படத்திற்காக தனுஷ் சுமார் 40 கோடி அளவில் சம்பளத்தை உயர்த்தி கேட்டு ஷாக் கொடுத்துள்ளாராம். இதற்கு காரணம் நடிகர் சிம்பு தானாம். மாநாடு படத்தின் 100 கோடி வசூலுக்கு பிறகு சிம்புவின் மார்க்கெட் எகிறியது. அதனால் வரும் படங்களில் தனுஷ் 40 கோடி சம்பளம் வரை உயர்த்தி கேட்டு நடித்தும் வருகிறார்.

இதனால் தனுஷ் எலன் இயக்கத்தில் உருவாகவுள்ள தயாரிப்பாளரிடம் 40 கோடியை கேட்டுள்ளார். இதனை கேட்ட பிரடொக்ஷன் டீமே ஆடிப்போய் தயாரிப்பாளரிடம் கூறியுள்ளனர். தயாரிப்பாளர் அதை கேட்டு நெஞ்சுவலியே வந்திரும் போலிருக்கிறது என்று புலம்பி தவித்துள்ளாராம்.

முன்னணி நடிகர்கள் பெரும்பாலும் ஒரு வெற்றி படத்தை கொடுத்தாலே போது அடுத்த படத்திற்கு பல கோடியில் சம்பளத்தை உயர்த்துவது சகஜம் தானே. அப்படி உயர்த்தும் நடிகர்களை தானே நீங்கள் வேண்டும் என்று கேட்கிறீர்கள் என விமர்சகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
Gallery

ஆசிரியர்