செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஸ்கூல் | திரைவிமர்சனம்

ஸ்கூல் | திரைவிமர்சனம்

1 minutes read

தயாரிப்பு : குவாண்டம் ஃபிலிம் ஃபேக்டரி

நடிகர்கள் : யோகி பாபு, பூமிகா சாவ்லா, கே. எஸ். ரவிக்குமார், பகவதி பெருமாள், நிழல்கள் ரவி, சாம்ஸ் மற்றும் பலர்

இயக்கம் : ஆர். கே. வித்யாதரன்

மதிப்பீடு : 2/5

தனியார் பாடசாலையின் பின்னணியில் மிஸ்ட்ரி திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் ‘ஸ்கூல்’ திரைப்படம் – அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

சென்னையின் புறநகர் பகுதி ஒன்றில் தனியார் பாடசாலை ஒன்று வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பாடசாலையில் பயிலும் மாணவர்கள் மர்மமான முறையில் மரணமடைகிறார்கள். இது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்க தொடங்குகிறது.

விசாரணையில் பாடசாலையில் அமானுஷ்யமான சம்பவங்கள் நடைபெறுவது கண்டறியப்படுகிறது. இதைத்தொடர்ந்து அமானுஷ்ய சக்திகளை கண்டறிந்து சாந்தப்படுத்தும் நிபுணர் ஒருவர் வரவழைக்கப்படுகிறார்.  அவருடைய முயற்சியில் பாடசாலையில் நடைபெறும் மர்மங்களின் பின்னணி என்ன என்பது விவரிக்கப்படுகிறது. அதன் பிறகு காவல்துறையினரும், பாடசாலை நிர்வாகமும் மேற்கொண்ட தொடர் நடவடிக்கை என்ன? என்பதுதான் இப்படத்தின் கதை.

திரைக்கதையில் மாணவர்கள் பாடசாலையின் நூலகத்தில் உள்ள பிரத்யேக புத்தகத்தை வாசிக்கும் போது மனவெழுச்சியும், மனத்தூண்டலும் எதிர்மறையாக பெற்று தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொள்கிறார்கள் என்று வடிவமைத்திருப்பதும், அதற்கு ஒருவர் எழுதியுள்ள புத்தகம் தான் காரணம் என்றும் கற்பித்து இருப்பதும் திரில்லர், அமானுஷ்யம் என்றாலும் ஏற்றுக் கொள்வதற்கு கடினமானதாக இருக்கிறது.

இந்தத் தருணத்தில் பாடசாலையில் பயிலும் பிள்ளைகளை ஆக்கிரமித்து இருக்கும் மைண்ட் கேம் குறித்தும்,  தனியார் பாடசாலையில் கல்விப் பயிலும் மாணவ மாணவிகளின் உளவியல் வலிமை குறித்தும் பேசி இருப்பதால்.. இயக்குநரைப் பாராட்டலாம்.

அமானுஷ்யங்கள் குறித்து விவரிக்கப்பட்டிருந்தாலும்.. அவை அனைத்தும் எந்தவித தாக்கத்தையும் பார்வையாளர்களிடத்தில் ஏற்படுத்தவில்லை. திரைக்கதையில் சில சுவாரசியமான திருப்பங்கள் இருந்தாலும்… அவை இயல்பாக விவரிக்கப்படாததால் பார்வையாளர்களிடத்தில் சோர்வை ஏற்படுத்துகிறது.

கனகவேல் என்ற ஆசிரியராக யோகி பாபு நடித்திருக்கிறார்.  மாணவர்களுக்கு அறிவுரை வழங்குகிறார். அன்பரசி எனும் கதாபாத்திரத்தில் நடிகை பூமிகா சாவ்லா நடித்திருக்கிறார் இவருக்கான திரை பங்களிப்பு குறைவு என்றாலும் கதையின் பிரச்சனைக்கு E C ( Experience- Contribution )என தீர்வளிப்பதன் மூலம் தான் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் தனித்துவமானது என நிரூபித்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் கே. எஸ். ரவிக்குமாரை இயக்குநர் போதுமான அளவிற்கு பயன்படுத்திக் கொள்ளவில்லை. அமானுஷ்யங்களை ஆய்வு செய்யும் நிபுணராக இயக்குநரே நடித்திருப்பது பலம் மற்றும் பலவீனம்.

ஒளிப்பதிவு, பாடல்கள், பின்னணி இசை,ஆகியவை குறைந்தபட்ச தரத்திலேயே உள்ளன.

ஸ்கூல் – க்ரூல்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More