தக் லைப் திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் 3 ஆவது நாளாக தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது.
இந்திய திரையிசை நட்சத்திரங்களில் தனித்துவமாக ஒளிரும் ‘இசை புயல்’ ஏ. ஆர் .ரஹ்மான் இசையில் உருவான தக் லைப் எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு நடைபெற்ற, இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்த மழை பாடலின் வீடியோ 3 மில்லியன்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
இப்பாடலில் ஒரிஜினல் வெர்ஷனை பாடகி “தீ” பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#MeToo சர்ச்சைக்குப் பின் சின்மயி திரைப்படங்களில் பாடத் தடை விதிக்கப்பட்ட சூழலில், நீண்ட நாட்களுக்குப் பின் அவரின் குரல் மேடையில் ஒலித்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சியுள்ளார்.
இந்நிலையில், தக் லைப் இசை வெளியீட்டு விழாவில் முத்த மழை பாடலை தீதான் பாடியிருப்பார். அன்று அவர் ஊரில் இல்லை. அதனால் நான் பாடினேன். எனக்கு கிடைத்த வரவேற்பை நம்பவே முடியவில்லை ஆர்ச்சரியமாக இருக்கிறது. இளம் திறமையாளரான தீ இன்னும் 15 ஆண்டுகளில் 100 சின்மயி, ஸ்ரேயா கோஷல்களை விழுங்கலாம் என சின்மயி தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘தக் லைப்’ திரைப்படத்தில் கமல் ஹாசன், சிலம்பரசன் ,அசோக் செல்வன், திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ் என பான் இந்திய நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் ஜூன் மாதம் ஐந்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் இந்த திரைப்படத்தினை இந்தியா முழுவதும் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் படக்குழுவினர் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.