‘மாமன்னன்’ திரைப்படத்திற்கு பிறகு வடிவேலு -பஹத் பாசில் கூட்டணி இணைந்து நடிக்கும் ‘ மாரீசன்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ மாரீசன்’ எனும் திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா ,பி. எல். தேனப்பன் , லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவண சுப்பையா, கிருஷ்ணா , ஹரிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியிலான பொழுதுபோக்கு திரைப்படமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சுப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி தயாரித்திருக்கிறார்.
ஜூலை மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் ‘மாரீசன் ‘ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. 1957ஆம் ஆண்டு ‘ தமிழில் வெளியான ‘ மாயாபஜார் ‘ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ ஆஹா இன்ப நிலாவினிலே..’ பாடலின் பின்னணியில் இப்படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுகமும் , அதற்கான காணொளியும் இடம் பிடித்திருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.