செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஏப்ரலில் வெளியாகும் செல்வராகவனின் ‘மனிதனும் தெய்வமாகலாம்’

ஏப்ரலில் வெளியாகும் செல்வராகவனின் ‘மனிதனும் தெய்வமாகலாம்’

1 minutes read

இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மனிதனும் தெய்வமாகலாம்’ திரைப்படம் – எதிர்வரும் ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.

இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மனிதனும் தெய்வமாகலாம்’ திரைப்படத்தில் செல்வராகவன், குஷி ரவி, ஆர் எஸ் சதீஷ், கௌசல்யா , மைம் கோபி , வை. ஜி. மகேந்திரா, லிர்த்திகா, சேலம் தீபக் , சுதா, ஜோதி கண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே.. ரவிவர்மா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ கே பிரியன் இசையமைத்துள்ளார்.‌

கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வ்யோம் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் விஜயா சதீஷ் மற்றும் ஆர் எஸ் சதீஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் அதிர்வை ஏற்படுத்தி படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் நிலையில் இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி வெளியாவதால்.. முதல் நாள் முதல் காட்சியிலேயே பார்க்க வேண்டும் என்ற ஆவல் ரசிகர்களிடத்தில் எழுந்திருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.