செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா கவின் – நயன்தாரா நடிக்கும் ‘ஹாய் ‘ படத்தின் அப்டேட்

கவின் – நயன்தாரா நடிக்கும் ‘ஹாய் ‘ படத்தின் அப்டேட்

1 minutes read

தமிழ் சினிமாவின் லேடி சுப்பர் ஸ்டாராக திகழும் நயன்தாராவும், நட்சத்திர நடிகராக உயர்ந்து வரும் கவினும் முதன் முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கன்னக்குழியா..’ எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹாய்’ திரைப்படத்தில் நயன்தாரா ,கவின், கே. பாக்யராஜ், ராதிகா சரத்குமார் ,பிரபு, வி டி வி கணேஷ், சத்யன், அமிர்தா சீனிவாசன், ‘ஆதித்யா’ கதிர் , ‘பெப்சி ‘ விஜயன் ,காவ்யா அறிவு மணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ்-  தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

இப்படத்தில் இடம்பெற்ற ‘கன்னக்குழியா  பொத குழியா குழப்புறியே ..’எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் விஷ்ணு எடவன் எழுத பின்னணி பாடகரான ஜு வி பிரகாஷ் குமார் பாடியிருக்கிறார்.

இந்தப் பாடல் மென்மையான தாள லயத்தின் பின்னணியில் எளிமையான பாடல் வரிகளுடன் உருவாகி இருப்பதால் … அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதன் காரணமாக இந்தப் பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.