செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகர்கள் சந்தோஷ் – வினோத் கிஷன் நடிக்கும்’ டபுள் ஓக்குபன்சி’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

நடிகர்கள் சந்தோஷ் – வினோத் கிஷன் நடிக்கும்’ டபுள் ஓக்குபன்சி’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

1 minutes read

நடிகர் சந்தோஷ்- வினோத் கிஷன் ஆகியோர் கதையை வழி நடத்திச் செல்லும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்’ டபுள் ஓக்குபன்சி’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள’ டபுள் ஓக்குபன்சி’ திரைப்படத்தில் சந்தோஷ், சம்யுக்தா விஸ்வநாத், ரேஷ்மா வெங்கடேஷ், வினோத் கிஷன், வி டி வி கணேஷ், பக்ஸ் பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாந்தகுமார் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ள இத்திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். ஃபேண்டஸி ரொமான்டிக்காக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அவ்னி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் குஷ்பூ சுந்தர் மற்றும் ஏ சி எஸ் அருண்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் பாடல்கள்- டீசர் ஆகியவை வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில்… இந்தத் திரைப்படம் எதிர்வரும் 12- ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அறிவியல் புனைவு கலந்த கற்பனையும், காதலும் இணைந்த படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.