செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகர் பாரத் நடிக்கும் ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் அறிமுக பாடல் வெளியீடு

நடிகர் பாரத் நடிக்கும் ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் அறிமுக பாடல் வெளியீடு

1 minutes read

டிஜிட்டல் திரை பிரபலமான பாரத் கதாநாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகமாகும் ‘மிஸ்டர் பாரத்’ எனும் திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் படக் குழு உருவாக்கிய பிரத்யேக பாடலும் , பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் நிரஞ்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தில் பாரத், சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், ஆர் . சுந்தர்ராஜன், ஆதித்யா கதிர், சிபி சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

ஓம் நாராயண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரணவ் முனி ராஜ் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக்  கொமடி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஃபேசன் ஸ்டுடியோஸ் – ஜீ ஸ்குவாட் – தி ரூட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் – ஜெகதீஷ் பழனிச்சாமி – ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் இப்படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கத்திலும்… அறிமுகப்படுத்தும் நோக்கத்திலும்… படக்குழுவினர், ‘ஜபரு நா நவுரு..’ எனத் தொடங்கும் பாடலையும்,  பாடலுக்கான காணொளியையும் வெளியிட்டுள்ளனர்.

இந்தப் பாடலை பாடலாசிரியர் ரோகேஷ் எழுத பின்னணி பாடகர் சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கிறார். இளைய தலைமுறையினரை கவரும் வகையில் பாடல் உருவாகி இருப்பதால்… இணையவாசிகளின் ஆதரவை பெற்று வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.