செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகர் அஷ்ரஃப் நடிக்கும் ‘போட்டோகிராபர் ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அஷ்ரஃப் நடிக்கும் ‘போட்டோகிராபர் ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

1 minutes read

ஆகாய விமானத்தை இயக்கும் விமானியான கப்தன் அஷ்ரப் கதையின் நாயகனாக அறிமுகமாகும்  ‘போட்டோகிராபர் ‘எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் அஷ்ரப் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘போட்டோகிராபர் ‘ திரைப்படத்தில் அஷ்ரப், ஜனனி,  ‘ஆடுகளம் ‘நரேன், கருணாகரன், வேல. ராமமூர்த்தி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரயீஸ் அஹமத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜ்குமார் சந்திரசேகரன் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ பி எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அப்துல் பாசித் சயீத் தயாரித்திருக்கிறார்.

எதிர் வரும் 17ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகளும் , உரையாடல்களும் ரசிகர்களை உறைய செய்திருக்கிறது. இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. மேலும் புதிரும் , மர்மங்களும் நிறைந்த மதி கெட்டான் சோலை எனும் மலை சார்ந்த நிலவியல் பகுதியில் நடைப்பெற்ற சம்பவங்களை தழுவி திரைக்கதை உருவாக்கப்பட்டிருப்பதால்…இப்படத்தை காண வேண்டும் என்ற ஆவல் எழுந்திருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.