செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட லியோ சிவகுமாரின் ‘டெலிவரி பாய்’ படத்தின் டீசர்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட லியோ சிவகுமாரின் ‘டெலிவரி பாய்’ படத்தின் டீசர்

1 minutes read

‘அழகிய கண்ணே’, ‘சாமானியன்’, ‘மாண்புமிகு பறை’ ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகர் லியோ சிவகுமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் நானி இயக்கத்தில் உருவாகியுள்ள :டெலிவரி பாய்’ திரைப்படத்தில் லியோ சிவகுமார், ராதிகா சரத்குமார், பிரிகிடா சகா, காளி வெங்கட், ஜென்சன் திவாகர், போஸ் வெங்கட், துஷ்யந்த் , உதயா தீப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அசோக் குமார் ராஜ் மற்றும் பிரசன்னா எஸ். குமார் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. எஸ். சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அஸாசி கிரியேசன்ஸ் மற்றும் சாண்டி  டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அமுதா லியோனி மற்றும் லெனின் மாதேஸ்வரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து இம்மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள்-  தாயின் உயிரைக் காப்பாற்ற மகன் மேற்கொள்ளும் இமாலய சவால்கள் தொடர்பான காட்சிகள் கொமர்சல் அம்சங்களுடன் இடம் பிடித்திருப்பதால்… ரசிகர்களிடம் படத்தை பற்றிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.