செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

1 minutes read

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘டிசி ‘திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஹேங்கோவா..’ எனும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டிசி’ திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ்- வாமிகா கபி -சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி- ஆகியோர் முன்னணி வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

ஜி. முகேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். கேங்ஸ்டர் பின்னணியில் எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் 31-ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஹேங்கோவா ..’எனும் பாடலும் , பாடலுக்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த பாடலை பாடலாசிரியர் ஹைசன்பர்க் எழுத, பின்னணி பாடகரும் ,இசையமைப்பாளருமான அனிருத் பாடியிருக்கிறார். ஆங்கில பாடலாக உருவாகி இருக்கும் இந்தப் பாடல்-  தமிழ் திரையிசை ரசிகர்களுக்கு புதிய இசை அனுபவத்தை வழங்கி இருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.