பிலிப்பைன்ஸின் ஜாம்போங்கா (Zamboanga) நகரில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இன்று (18) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த இருவரும் மாணவர்கள் என ஜாம்போங்கா நகர மேயர் கைமர் அடான் ஒலாசோ (Khymer Adan Olaso) தெரிவித்துள்ளார்.
சம்பவத்தைத் தொடர்ந்து பாடசாலை வளாகத்தில் அவசரகால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு காரணங்களுக்காக அப்பகுதியை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், துப்பாக்கிச்சூடு எவ்வாறு இடம்பெற்றது, சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட மேலதிக விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.