செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘வாணவேடிக்கை’ படத்தின் தொடக்க விழா

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘வாணவேடிக்கை’ படத்தின் தொடக்க விழா

1 minutes read

மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் இளைய வாரிசான சண்முக பாண்டியன் விஜயகாந்த் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘வாணவேடிக்கை’ என பெயரிடப்பட்டு,  அதன் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் திரு இயக்கத்தில் உருவாகும் ‘வாணவேடிக்கை’ திரைப்படத்தில் சண்முக பாண்டியன் விஜய் காந்த்,  ‘பருத்திவீரன்’ சரவணன், இயக்குநர் தமிழ், தயாரிப்பாளர் டி சிவா, கிரண், ஜெயப்பிரகாஷ், ஸ்டில்ஸ் பாண்டியன், கும்கி அஸ்வின், சாரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அர்வி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார்.

கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் இந்திய மாநிலங்களவை உறுப்பினரான எல். கே. சுதீஷ் தயாரிக்கிறார்.

இப்படத்தின் தொடக்க விழாவில் திருமதி பிரேமலதா விஜயகாந்த் – இயக்குநர்கள் சுசீந்திரன் – ராஜா ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இப்படத்தின் பாரம்பரிய படப்பிடிப்பை திருமதி பிரேமலதா விஜய்காந்த் & திருமதி பூர்ண ஜோதி சுதீஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” தந்தைக்கும், மகனுக்குமான உணர்வை சொல்லும் கொமர்சல் திரைப்படமாக  இப்படம் உருவாகிறது. இதுவரை திரையில் பார்த்திராத சண்முக பாண்டியனை காணலாம்” என்றார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.