Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் ரோஸ் புடிங்

ரோஸ் புடிங்

1 minutes read

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – 1கப்
தண்ணீர் – 2 கப்
பால் – 8 கப்
பொடியாக நறுக்கிய பாதாம் – ½ கப்
ஊறவைத்த திராட்சை – ½ கப்
குங்குமப்பூ – 1 சிட்டிகை
ஆர்கானிக் பன்னீர் ரோஜா இதழ்கள் – ¼ கப்
ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்
சீனி – ¼ கப்
பன்னீர் (ரோஸ் வோட்டர்) – 2 டீஸ்பூன்

செய்முறை

  • பெரிய பாத்திரத்தில், சுத்தம் செய்த பாஸ்மதி அரிசியையும், தண்ணீரையும் கலந்து மிதமான தீயில் 20 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  • இந்த பக்குவத்தில் அரிசி குழையாமல் இருக்கும்.
  • இப்போது அதில் பாலை ஊற்றி லேசாக கொதிக்க விடவும்.
  • பிறகு அடுப்பை சிறு தீயில் வைத்து 30 நிமிடங்கள் அரிசியை பாலில் வேகவைக்கவும்.
  • இந்த சமயத்தில் அரிசி அடி பிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
  • இப்போது ரோஜா இதழ்கள், பாதாம் மற்றும் திராட்சையை அதில் கொட்டி நன்றாகக் கிளறி, மீண்டும் 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.
  • குங்குமப்பூவை சிறிய தட்டில் போட்டு, அதில் 1 டீஸ்பூன் சூடான பாலை ஊற்றி ஊறவைத்து குழைத்துக் கொள்ளவும். பின்னர் சீனி, ஏலக்காய் பொடி, பன்னீர், குழைத்த குங்குமப்பூ எல்லாவற்றையும் வெந்து கொண்டிருக்கும் அரிசியில் போட்டு நன்றாகக் கிளறவும்.
  • இப்போது ரோஜா பூ புடிங் தயாராகிவிட்டது.
  • அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைக்கவும். இதை லேசான சூட்டிலும் பரிமாறலாம் அல்லது ஃபிரிட்ஜில் வைத்து குளிரச்செய்தும் பரிமாறலாம்.
  • மேலே உலர்ந்த ரோஜா இதழ்கள், பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா தூவி அலங்கரிக்கலாம்.

நன்றி இணைய இதழ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More