துவரம் பருப்பு உருண்டை

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு – 1 கப் (4 மணிநேரம் நீரில் ஊற வைத்தது)

வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கியது)

பூண்டு – 6 பல்

கறிவேப்பிலை – ஒரு கையளவு

கொத்தமல்லி – ஒரு கையளவு

பட்டை – 1 இன்ச்

சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

அரிசி மாவு – 1/2 கப்

கடலை மாவு – 1/2 கப்

பேக்கிங் பவுடர் – 2 டீஸ்பூன்

உப்பு – சுவைக்கேற்ப

எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை

முதலில் ஊற வைத்துள்ள துவரம் பருப்பை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் அரைத்த துவரம் பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதே மிக்சர் ஜாரில் எண்ணெய் மற்றும் மாவுகளைத் தவிர, மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து ஒருமுறை அரைத்து, பாத்திரத்தில் உள்ள துவரம் பருப்புடன் சேர்த்து நன்கு பிசைய வேண்டும்.

ஆசிரியர்