செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு அறிவார்ந்த மீள் வாழ்வுக்கும் மேம்பாட்டுக்குமான அருங்கொடையான  ஞானோதய பொது நூலக திறப்புவிழா

அறிவார்ந்த மீள் வாழ்வுக்கும் மேம்பாட்டுக்குமான அருங்கொடையான  ஞானோதய பொது நூலக திறப்புவிழா

1 minutes read

கட்டுவன் ,தென்மயிலை, வர்த்தலை விளான் ஞானோதயா பொது நூலக நற்பணியகம் .பிரான்ஸ் பாலர் ஞானோதய  நற்பணிமன்றத்தின் அனுச ரணைடன் முன்னெடுத்த பொது நூலகம், தைப்பூச நன் நாளில் நற்பணியக தலைவர்கள் பேராசிரியர் என். சண்முகலிங்கன் ,  மயிலை தர்மகுலசிங்கம்  சகிதம் முதன்மை விருந்தினரான வலி வடக்கின் பிரதேச செயலர் திருமதி சிவகெங்கா சுதேஸ்னரினால் திறந்து வைக்கப்பட்டது.  நிதி உதவியவர்  நினைவுக் கல்வெட்டினை வலிவடக்கு பிரதேசசபை உப தவிசாளர் திரு தங்கராஜா திறந்துவைத்தார்.

அறிவார்ந்த மீள் வாழ்வுக்கும் மேம்பாட்டுக்குமான அருங்கொடை யாக  ஞானோதய பொது நூலகம் வாய்த்துள்ளது .பாடசாலை மாணவருக்கும் பல்துறை ஆய்வாளருக்கும்  இன்றியமையாத 20000க்கும் அதிகமான நூல்களுடன் அமையபெற்றுள்ளது. இதனை உரியவாறு பயன் படுத்துவது எமது கடனாகும் என தன் தலைமை உரையில் குறிப்பிட்டார் பேராசிரியர் சண்முகலிங்கன். வாசிப்புப்புபழக்கமருகியுள்ல இந்த காலத்தில் வாசிப்பின் அவசியத்தினை உணர்த்தும் வண்ணம் அழகுற நூலகத்தை அமைக்க உழைத்த அனைவரையும் பாராட்டுகின்றேன் என முதன்மை விருந்தினரான பிரதேச செயலர் சிவகெங்கா சுதேஸ்னர் தெரிவித்தார்.  நூலகத்தின் எதிர்கால செயற்பாடுகள் பற்றி எழுத்தாளர் பி இறயாகரன் விளக்கினார். நூலக திறப்புவிழா மலரின் முதல் பிரதியை பொருளாளர் சி,  விஜயகுமார் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

நற்பணிமன்ற செயலாளர் திரு வீரபத்மன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். ஊரின் புலம்பெயர் தேசத்து உறவுகள் பலர் இத்திறப்பு விழாவுக்கென வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தைப்பூச நன்னாளில் எங்கள் நீண்ட நாள் கனவு மெய்ப் படுகின்றது.எங்கள் ஞானோதய பொது நூலகம் வசமா கின்றது. சங்கம் வளர்த்த, சங்கத்தினால் வளர்ந்த எங்கள் கட்டுவன், தென்மயிலை, வர்த்தலைவிளான்   கிராமங்ளின் அறிவார்ந்த மீள் வாழ்வுக்கும் மேம்பாட்டுக் குமான அமைப்பாக ஞானோதயா பொதுநூலக   நற்பணியகம் அமையப் பெற்றது.

முன்னாள் துணைவேந்தரின் வாழ்த்து

எங்கள் மூந்தையோர் ஆசியுடன் அறிவே தெய்மென்ற பாரதியின் அடிச் சுவட்டிலே பாரதியின் நூற்றாண்டு நினைவு நாளான 2021 செப்ரெம்பர் 11ம் திகதியன்று  இப்பணியைத் தொடங்கினோம்.

நூலகம் , அருங்காட்சியகம் , கூடிக் கற்றலுக்கான தளம் என மூப்பரிமாணங்க ளில் வரையப்பட்ட எம் திட்டத்தில் முதல் கட்டத்தை இன்று வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கின்றோம்.

இந்தப்பணியின் கருத்திட்ட முன் மொழிவிலிருந்து  செயல் வடிவத்துக் கான பங்கேற்பு வரை உழைத்த பிரான்ஸ் ஞானோதய  நற்பணியக பிள்ளைகளினதும் ஏனைய  எங்கள் புலம் பெயர் தேசத்து உறவுகளினதும் அர்ப்பணிப்பு  இணை யிலாத  முன்னோடியான சமூகத் தொண்டு என்பேன்.  தெளிந்த  நிலை பேறான இந்தப் பணிக்கு தலைமை தாங்கக் கிடைத்த வாய்ப்பினை என் வாழ்நாள் பேறாகவே கருதுகின்றேன். இப்பணியில் இசைந்துள்ள அனைவரையும் எல்லையிலாத அன்புடன் வாழ்த்துகின்றேன்.

பேராசிரியர் கலாநிதி  நாகலிங்கம் சண்முகலிங்கன்

தலைவர், ஞானோதய பொது நூலக நற்பணியகம்

முன்னாள் துணைவேந்தர், யாழ்ப்பாணப்பல்கலைகழகம்

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.