செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு இறந்தவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட கருப்பை மூலம் பிறந்த முதல் இங்கிலாந்து குழந்தை

இறந்தவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட கருப்பை மூலம் பிறந்த முதல் இங்கிலாந்து குழந்தை

1 minutes read

இங்கிலாந்தில் முதன்முறையாக, இறந்த கொடையாளரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட கருப்பையைப் பயன்படுத்தி, ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கென்ட் (Kent) பகுதியைச் சேர்ந்த கிரேஸ் பெல் (Grace Bell) மற்றும் அவரது கணவன் ஸ்டீவ் பாவெல் (Steve Powell) ஆகியோருக்கு இந்த ஆண் குழந்தை பிறந்துள்ளது. 10 வாரங்கள் ஆகும் குழந்தையை அவரது பெற்றோர் ஒரு “அதிசயம்” என்று அழைக்கிறார்கள்.

கிரேஸ் பெல், ‘எம்.ஆர்.கே.எச் சிண்ட்ரோம்’ (MRKH syndrome) என்ற பாதிப்புடன் பிறந்தவர். இதன்காரணமாக அவருக்கு பிறப்பிலேயே கருப்பை இல்லை, ஆனால், சினைப்பைகள் (ovaries) சாதாரணமாக இருந்தன. தமக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று 16 வயதிலேயே அவருக்குக் கூறப்பட்டது.

இந்நிலையில், ஜூன் 2024 இல் ஆக்ஸ்போர்டில் உள்ள சர்ச்சில் மருத்துவமனையில் 10 மணி நேர அறுவை சிகிச்சை மூலம் கிரேஸுக்கு கருப்பை மாற்றப்பட்டது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு, இலண்டனில் உள்ள லிஸ்டர் கருத்தரிப்பு மையத்தில் ஐவிஎஃப் (IVF) மற்றும் கருமுட்டை இடமாற்றம் (embryo transfer) மூலம் அவர் கருத்தரித்தார்.

2025 கிறிஸ்துமஸுக்குச் சற்று முன்னதாக, இலண்டனில் உள்ள குயின் சார்லோட் மற்றும் Chelsea இல் மருத்துவமனையில் சுமார் 7 பவுண்டு எடையில் குழந்தை பிறந்தது.

இதுவே இங்கிலாந்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இந்த ஆய்வின் ஒரு பகுதியாக 10 கருப்பை மாற்று அறுவை சிகிச்சைகள் திட்டமிடப்பட்டுள்ளன, அதில் இறந்த கொடையாளர் மூலம் நிகழ்ந்த முதல் பிறப்பு இதுவாகும். முன்னதாக, 2025 இன் தொடக்கத்தில் ‘ஏமி’ என்ற குழந்தை உயிருடன் இருந்த கொடையாளர் (சகோதரி) அளித்த கருப்பை மூலம் பிறந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.