Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் எளிமையான மேக் அப் டிப்ஸ்.

எளிமையான மேக் அப் டிப்ஸ்.

3 minutes read

CONCEALER:
பெரும்பாலானோர் பவுன்டேசன் போட்ட பின்னர் ConcealerI போட்டுக்கொள்வார்கள். நான் அப்படியல்ல ஆரம்பத்திலேயே Concealer ஐ பூசிக்கொள்வேன். நீங்கள் விரும்பினால் இவ்வாறு செய்யலாம்.

எனவே, முதலில் கண்களைச் சுற்றி Concealer ஐ பூசிக்கொள்ளுங்கள். இதனை பூசுவதற்கு ப்ரஸ் அவசியமில்லை. கைவிரல்களில் தொட்டு பூசிக்கொள்ளலாம். அப்படி பூசும்போது அதனை நேர்த்தியாக பூசிக்கொள்ள வேண்டும்.

 FOUNDATION:
இதனை வாங்கும்போது உங்கள் சருமநிறத்துக்கு ஏற்ற வகையில் பார்த்து வாங்குங்கள்.

முதலில் சிறிதளவு வாங்கி பூசிப்பாருங்கள். அது உங்கள் சருமத்துக்கு பொருந்துமாக இருந்தால் வாங்குங்கள். சில Foundation பூசிய பின்னர் நிறம் அதிகமாக அல்லது குறைவாக தென்படும். அப்படியில்லாமல் உங்கள் சருமத்துக்கு பொருந்தும் வகையில் தெரிவுசெய்யுங்கள்.

Foundationஐ ஒரு பஞ்சில் தொட்டு முகத்துக்கு இலேசாக பூசிக்கொள்ளுங்கள்.

Foundation முகத்தில் காணப்படும் கரும்புள்ளிகள், முகப் பருக்களை மறைக்க பயன்படுத்துகின்றனர். ஆனால், முகப்பருக்களை மறைக்க Camouflage Cream இனையும் பயன்படுத்தலாம்.

 FINISHING POWDER:
Foundation பூசிய பின்னர் அதே பஞ்சில் Finishing Powderஐ தொட்டு பூசிக்கொள்ளுங்கள்.

   CONTOURING:
   இந்த Contouring Box உள்ளேயே ஒரு ப்ரஸ் இருக்கும்.       இதனை பயன்படுத்தி கன்னம் மற்றும் மூக்குப்     பகுதியில் பூசிக்கொள்ளுங்கள். இது கன்னம் மற்றும்   மூக்கினை எடுப்பாகக் காட்டும்.

  EYE BROWS:
 இதன்மூலம் நுலநடிசழறஇனை சீர்செய்து   கொள்ளுங்கள்.

  EYE SHEDOW:
 Eye shedow இல் அழகிய நிறங்கள் உள்ளன. அவற்றை     பூசுவதற்கு அதனுடன் ப்ரஸ்களும் உள்ளன.

கண்களைச் சுற்றி Eye shedowவினை பூசுவதற்கு அந்த   ப்ரஸ்கள் அவசியமில்லை. கைவிரல் நுனியில் தொட்டு   அதனை கண்புருவத்தின் கீழ்ப்பகுதி மற்றும் மேல்   இமைப் பகுதிகளில் பூசிக்கொள்ளுங்கள்.

 KAJAL:
 கண் இமையின் ஓரங்களில் பூசப்படும். Kajal பூசியவுடன்   கண் பிரகாசமாகத் தெரியும்.சிலருக்கு மேல் இமைக்கு   மட்டும் Kajal பூச பிடிக்கும். சிலர் கண் இமையை   சுற்றிலும் பூசிக்கொள்வார்கள். எனவே, அவரவர்   விருப்பத்துக்கேற்ப பூசிக்கொள்ளலாம்.

  MASKARA:
  Maskaraவை இமைகளுக்கு ஒரே நிலையில் போட்டாலே   போதும் மீண்டும் மீண்டும் போட வேண்டாம்.   அதேவேளை இலேசாக போட்டாலே போதுமானது   அழகாக இருக்கும்.

 BLUSH:
 இதனை ப்ரஸ் ஒன்றில் தொட்டு கண்ணப் பகுதியில் பூசிக்கொள்ளுங்கள்.

LIP BALM:
Lipstick போடுவதற்கு முன்னர் Lip Balmஇனை பூசிக்கொள்ளுங்கள். Lip Balm போடாமல் Lipstick போடும்போது உதடு வரட்சியாக காட்சியளிக்கும்.

LIPSTICK:
இறுதியாக Lipstickஐ பூசிக்கொள்ளுங்கள். சிலர் Lipstickஐ ப்ரஸ் மூலமாக பூசுவார்கள். நான் நேரடியாகவே உதடுகளில் பூசுவேன். எப்படி பூசினாலும் தங்கள் மேக்கப்புக்கு ஏற்றவகையில் அடர்த்தியாகவும் மென்மையாகவும் பூசிக்கொள்ளுங்கள்.

Note:

மேக்கப் என்பது ஒரு கலை. அதனை ரசித்து செய்யவேண்டும். அவரவர் முக அமைப்புக்கேற்ப நிறத்துக்கு அமைய மேக்கப் செய்யவேண்டும்.
எப்போதுமே மேக்கப்பினை அள்ளி பூசாமல் இலேசாக பூசினால் அழகு மிகையாகத் தெரியும்.
அத்துடன் மேக்கப் என்பது பார்ப்பவர் கண்களை உருத்தாதபடி அமையவேண்டும்.
கேக்கப் பொருட்களை வாங்கும்போது அதில் சன்ஸ்கிறீ;ன் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்று பாருங்கள். தரமற்ற மேக்கப் பொருட்கள் சருமத்தை சிதைத்து கருமையடைய செய்து விடும். எனவே, எப்போதும் கலாவதியாகும் திகதி மற்றும் தரம் பார்த்து வாங்குங்கள்.
இதேபோன்று மேக்கப்புக்கு அவசியமான ப்ரஸ்களையும் பார்த்து வாங்கிக்கொள்ளுங்கள். ப்ரஸ்களை மேக்கப்புக்கு பயன்படுத்திய பின்னர் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
சிம்பிள் மேக்கப் என்பது போட்டது தெரியாமல் இருக்கவேண்டும். முகம் பிரகாசமாக இருக்கவேண்டும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More