பெண்கள் 40 வயதிலும் 20 போல் இருக்க

முதுமை அல்லது வயதாவதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் நமது உடலை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள முடியும். பொதுவாகவே திருமணத்திற்குப் பிறகு பெண்கள் தங்களை கவனித்துக் கொள்வதில்லை.

குடும்பம், வீடு, குழந்தை என அவர்கள் தங்களை மறந்து குடும்பத்துக்காக உழைத்துக் கொண்டிருப்பார்கள். இன்றை நிலைமை கொஞ்சம் மாறியுள்ளது. பல பெண்கள் தங்களது உடல் நலன் மீது அக்கறை செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

மனநிலை முக்கியம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மகிழ்ச்சியான, அமைதியான மனநிலை அவசியம். இந்த உலகில் பிரச்சனைகள் இல்லாத மனிதர்களே கிடையாது. நாம் அனைவரும் எத்தனையோ பிரச்சினைகளைக் கடந்தே வந்திருப்போம்.

நாம் வாழ்வதே இந்த உடலின் மூலம் தான். ஆகவே உடல் மிது நமக்கு மிகுந்த அக்கறை வேண்டும். எனவே முதலில் கவனிக்க வேண்டியது தூக்கம், வாரத்துக்கு 4 முதல் 6 தடவையாவது சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்வது அவசியம்.

நிம்மதியான தூக்கம் உங்கள் உடலின் செல்களை புத்துணர்வு அடையச் செய்யும்.

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல உணவு முக்கியம்.

ஆசிரியர்