June 7, 2023 7:26 am

இயற்கை மொய்ஸ்சரைசர்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
மொய்சரைசர்

மொய்ஸ்சரைசர் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைக்கும் ஒன்றாகும் நாம் செயற்கை மொய்ஸ்சரைசர்களையே பயன் படுத்துவதுண்டு இப்போது இயற்கை மொய்ஸ்சரைசர் பற்றி பார்ப்போம்

தேங்காய் எண்ணெய், தேன்: தேங்காய் எண்ணெய்யில் இருக்கும் நிறைவுற்ற கொழுப்புகள், சருமத்துக்கு ஈரப்பதத்தைக் கொடுத்து அதை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும். முகப்பரு பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் இதை பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். தேன் சிறந்த மொய்ஸ்சுரைசராக செயல்படுகிறது. இதில் உள்ள பக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டி செப்டிக் பண்புகள் முகப்பருக்களை குணமாக்கும்.

பயன்படுத்தும் முறை: தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாகக் கலந்து, முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவவும். 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும். தேங்காய் எண்ணெய்க்கு மாற்றாக, ஒலிவ் எண்ணெய்யையும் பயன்படுத்தலாம்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்