Saturday, January 16, 2021

இதையும் படிங்க

ஈழத் திரைப்பட இயக்குனர் கேசவராஜன் காலமானார்!

ஈழத்தின் முதன்மையான திரைப்பட இயக்குனர் நா. கேசவராஜன் மாரடைப்பால் இன்று காலமானார். ஈழத் திரையுலகத்தை பெரும் சோகத்தில்...

பாலென காதல் பொங்கும் | கவிதை | குடந்தை பரிபூரணன்

முன் புற மாடி வீட்டின்முன்றலில் ஓர் இ ளைஞன்மின் கதிர் பார்வை யாலென்மீன் விழி துடிக்கச் செய்வான் அன்...

தாயாய் தாதியாய்..! | சிறுகதை | குரு அரவிந்தன்

(அம்மா, சமூகத்திற்குச் சேவை செய்யத்தான் வேண்டும், ஆனால் எங்களுக்கு நீதான் வேண்டும் – மகளின் ஓலம் அவளது காதுகளில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தன) ‘அம்மா, நீ...

என்றும் வாழ்த்தை வழங்கிடுவோம் | மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

இனிமை பயக்கப் பேசிடுவோம்      இயலும் வரைக்கும் உதவிடுவோம்பகைமை மறக்க முயன்றிடுவோம்      பலரும் விரும்பப்...

உயிரோடு புதைந்து போனவர்கள்! | வசீகரன்

இருள் விழுங்கிய மேகமாய் விடிந்ததுஇயர்தரூம் நோர்வேயின் கிழக்குப்பகுதி!நிலச்சரிவு புதுச்சொல் அல்லஅல்லலோடு பிறந்த சொல்! கண்முன் ஓடியது திரைப்படம் போல்விழகளில் திகில்...

சாதனைத் தமிழன் விருது பெற்ற பேராசிரியர் சி.மௌனகுரு!

நாடக அரங்கப்பணிகளை மக்கள் மயப்படுத்தியும் உயர்கல்விக்குரிய ஆய்வுப் பொருளாக்கியும் உயிர்ப்புடன் செயற்படும் ஓய்வுநிலைப் பேராசிரியர் சின்னையா மௌனகுரு அவர்களுக்கு டான் தொலைக்காட்சியின் 2020ஆம் ஆண்டுக்கான...

ஆசிரியர்

அப்பா | சிறுகதை | ஜெயஸ்ரீ சதானந்தன்

மாலை ஏழு மணியாகியும் கூட புகழேந்தி வீட்டுக்கு வரவில்லை. வயலில் இருந்து வீட்டுக்கு வந்த அப்பாவும் “புகழேந்தி இன்னும் வரேல்லையா?” என்று அம்மாவிடம் கோபமாக கேட்டு விட்டு களைப்போடு போய் நாற்காலியில் அமர்ந்தார்.

அந்தக் குடும்பம் கிளிநொச்சியிலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கின்றது. அப்பாவுக்கு நான்கு ஏக்கர் வயல் உள்ளது. நல்ல கடின உழைப்புள்ள ஒரு விவசாயி. தன்நிறைவோடு நடுத்தர வாழ்க்கை வாழும் குடும்பம் அது. புகழேந்திக்கு ஒரு அக்காவும் தம்பியும் உள்ளனர். புகழேந்தி பத்தாம் வகுப்புத் தேர்வுக்காக படித்துக்கொண்டிருக்கும் காலம் அது.

முற்றத்து மாமரத்தில் அணில் கொந்திய மாம்பழம் ஒன்று விழுந்திருந்தது. மிகவும் இனிப்பாக இருக்கும். விலாட்டு மாம்பழம் அது. அணில் கொந்திய பக்கத்தை வெட்டி எறிந்து விட்டு அப்பாவுக்கு அதில் ஒரு துண்டு கொண்டு வந்து அம்மா கொடுத்தார்.

“எனக்கு வேண்டாம் அவனுக்கே கொடு” என்றார் அப்பா.

அந்த மரத்து மாம்பழம் என்றால் அவனுக்குக் கொள்ளைப் பிரியம் என்பது அவருக்கு தெரியும். அந்த நேரம் என்று பார்த்து, புகழேந்தியும் நண்பர்களுடன் கால்பந்து விளையாடி விட்டு உற்சாகத்துடன் வீடு வந்து சேர்ந்தான். வீட்டின் முன்னால் அமர்ந்திருந்த அப்பாவும் அவனைக் கண்டதும் காட்டு கத்தல் கத்த தொடங்கினார்.

“பிரச்சினையான நேரத்தில் வீட்டில் இருந்து படிக்க வேண்டிய வேளையில் இப்படி நேரங்கெட்ட நேரத்தில் வருகிறியே” என்று தொண்டை கிழிய கத்தினார்.

எருமை மாட்டில் மழை பெய்தது போல எதுவும் கேட்காமல் அடுக்களையை நோக்கிச் சென்றான்.

“எங்கே அம்மா அவரைத் தேடிப் பிடித்து கல்யாணம் செய்தீர்கள்?” என்று கேட்டுச் சிரித்தான்.

இரவுச் சாப்பாடு என்ன என்று அவனும் வினவ “புட்டும் முட்டை பொரியலும் மாம்பழமும் இருக்கிறது” என்றார் அம்மா. குளித்துவிட்டு வந்தவுடன் தம்பியுடன் நன்றாக வம்பளந்து கொண்டே சாப்பிட்டுவிட்டு படுக்கச் சென்றான்.

விடியற்காலையில் புகழேந்தி நித்திரையில் இருக்கும்போது, அவனது நண்பன் சாந்தன் ஓடிவந்து எழுப்பினான். இராணுவம் கிளிநொச்சியை நோக்கி வருகிறது. எல்லோரும் வேறு இடம் போக வேண்டுமென்றான்.

வீதியில் சில ஆட்கள் இடம்பெயர்ந்து போய்க்கொண்டு இருந்தனர். இவர்களும் தங்களுடைய முக்கியமான பெறுமதியான பொருட்களை கட்டினார்கள். புகழேந்தியின் ஓவியங்களையும் அப்பா எடுத்து வைக்கச் சொன்னார். அவன் ஒவ்வொரு ஓவியத்தோடு பாசம் வைத்துப் பேசுவான்.

கிளிநொச்சியிலிருந்து விசுவமடு என்னும் இடத்திற்கு சென்றனர். அங்கு ஒருவரின் நிலத்தில் தற்காலிகமாக குடிசை அமைத்து தங்கினர். நாளாக ஆக கொண்டு வந்த காசு எல்லாம் கரைந்து போனது. கடைசியாக அம்மாவின் நகையை விற்று அரிசி வாங்கி சமைத்துச் சாப்பிட்டனர். அங்கும் நிறையப் பேர் எறிகணைத் தாக்குதலால் இறந்துபோனார்கள். மேலும் இராணுவம் அவர்கள் இருந்த இடம் நோக்கி முன்னேறியது. அடுத்து புகழேந்தியின் குடும்பமும் முள்ளிவாய்க்கால் நோக்கிச் சென்றது.

புகழேந்திக்கு இரண்டு நாளாக நல்ல காய்ச்சல் காய்ந்தது. ஒழுங்கான சாப்பாடும் இல்லை. அம்மா பசிக்குது என்று ஈனக் குரலில் முனகினான்.

அப்பா வெளியில் போய் வருவதாக கூறிச் சென்றார்.  எதையாவது விற்று அரிசி வாங்க அவர்களிடம் எதுவும் இல்லை. விற்பதற்கு யாரிடமும் அரிசியும் இல்லை. அந்த இடத்தில் புகழேந்தியின் நண்பன் சாந்தன், அப்பாவைக் கண்டு யாரோ கஞ்சி கொடுக்கிறார்கள் என்று கூட்டிச்சென்றான்.

அங்கு மிக நீளமான வரிசையில் மக்கள் நின்றனர். பொறுமையோடு நின்று அவர்களது முறை வரும்போது கஞ்சியை வாங்கிக்கொண்டு புறப்பட்டனர். எங்கிருந்தோ வந்த எறிகணை அப்பாவை படுகாயப்படுத்தியது. சாந்தன் துடிதுடித்துப் போய் கத்திக் குளறினான். வைத்தியசாலைக்கு கொண்டு போகிறேன் என்று அழுதான்.

“இல்லை மகனே என்னால் முடியாது இந்த கஞ்சியைக் கொண்டுபோய் புகழேந்தியிடம் கொடு” என்று சொன்னபடியே அவரது உயிர் பிரிந்து போனது.

.

நிறைவு..

.

.

.

ஜெயஸ்ரீ சதானந்தன்

இதையும் படிங்க

16 ஆண்டுகளில் 97ஆயிரம் ஆவணங்கள் | நூலகம் பவுண்டேசனின் சாதனை!

16 ஆண்டுகளில் 97ஆயிரம் புத்தகங்களை டிஜிட்டல் ஆவணவமாக பதிவாகியுள்ளது நூலகம் பவுண்டேசன். உலகின் பல்வேறு நாடகளில் இருந்தும் தமிழ் நூல்களை இணைய நூலகத்தில்...

பொங்கல் | கவிதை

கட்டிக்கரும்பு வெளஞ்சிருக்குகாடெல்லாம் செழிச்சிருக்குதைமாசம் பொறக்கையிலேமனசெல்லாம் நெறஞ்சிருக்கு பச்சைப்போர்வை போர்த்திநிக்கும்நெல்வயல் அங்கே.. இன்னும்சிலநாளில் தலகுனியும்கதிர் முதிர்ந்தாலே..

சந்தியாராகத்தின் கவிதைச்சரம் – 2021 | மூத்தோரின் அசத்தல் கவிதைகள்

கனடா விலா கருணா மூத்தோர் காப்பகத்தின் சந்தியாராகம் நிகழ்வின் ஒரு அங்கமாக கவிதைச்சரம் நிகழ்வு நேற்று மாலை (01. 10. 2021) நடைபெற்றது.

திருகோணமலையில் சோழர் | டாக்டர் ஜீவராஜின் புதிய நூல்

இலங்கையில் சோழர்களது 77 வருட கால ஆட்சியில் அவர்களது தலைநகரமாக பொலன்னறுவை என்கின்ற ஜனநாதமங்கலம் இருந்தபோதிலும் அவர்களது செயற்பாட்டுப் பிரதேசமாக திருகோணமலையே முக்கியத்துவம் பெற்றிருந்தது. திருகோணமலையில்...

நாம் செய்ய வேண்டியவை | வெற்றிச்செல்வி

இடி-உடை-நொருக்கு-பழிதீர் இளையவர்களே!நாம் செய்ய வேண்டியவை எல்லாம்துரும்பாயாகினும்முளைப்பதேமுளைத்துக்கிளைப்பதே நீயும் நானும்அவர்களது கருத்தில் 'பொருட்டாயிருக்கிறோம்' அதுவே வெற்றி தான்.

போரியல் வாழ்வை திரைக்குள் வரைந்த கலைஞன் | கேசவராஜனுக்கு மாமனிதர் விருது!

நிதர்சனம் நிறுவனத்தின் திரைப்பட இயக்குநர்களில் ஒருவராக பல ஈழத் திரைப்படங்களை உருவாக்கிய திரைப்பட இயக்குநர் மாமனிதர்  நவரட்ணம் கேசவராஜன் அவர்கள் 09.01.2021 அதிகாலை 02.30 மணியளவில் மாரடைப்பு காரணமாக காலமானார். ஈழத் திரைப்பட இயக்குனர் கேசவராஜனுக்கு விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகம் மாமனிதர் விருது அறிவித்துள்ள நிலையில், புலிகளின்...

தொடர்புச் செய்திகள்

தூறல்கள் மழையாகலாம் | சிறுகதை | விமல் பரம்

ஞானம் சஞ்சிகையால் 2020 ல் நடாத்தப்பட்ட "அமரர் செம்பியன் செல்வன்" ஞாபகார்த்த சிறுகதைப் போட்டியில் விமல் பரம் அவர்களின் இச் சிறுகதையானது ஆறுதல் பரிசினைப் பெற்றுள்ளதோடு மார்கழி மாத ஞானம்...

தனிமையிலே இனிமை காண முடியுமா…? | சிறுகதை | சரசா சூரி

“செல்வம் அண்ணா ! சீக்கிரம் வண்டிய எடுங்க.. வகுப்புக்கு நேரமாகுது….போன வாரமே நானு போறதுக்குக்குள்ள பாடம் ஆரம்பிச்சிட்டாங்க… இனிமே லேட்டாக வந்தா வகுப்ப மிஸ் பண்ண...

புவிராஜசிங்கி | சிறுகதை | நூருத்தீன்

தேதி 19 - வெள்ளி. சென்னை வாட்ஸ்அப் வீடியோ அழைத்தது. விடாமல் இசைத்த அதன் ஒலி சில நிமிடங்களுக்குப்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

சந்தியாராகத்தின் கவிதைச்சரம் – 2021 | மூத்தோரின் அசத்தல் கவிதைகள்

கனடா விலா கருணா மூத்தோர் காப்பகத்தின் சந்தியாராகம் நிகழ்வின் ஒரு அங்கமாக கவிதைச்சரம் நிகழ்வு நேற்று மாலை (01. 10. 2021) நடைபெற்றது.

பாலென காதல் பொங்கும் | கவிதை | குடந்தை பரிபூரணன்

முன் புற மாடி வீட்டின்முன்றலில் ஓர் இ ளைஞன்மின் கதிர் பார்வை யாலென்மீன் விழி துடிக்கச் செய்வான் அன்...

குதிகால் வெடிப்புக்கு தீர்வு தரும் எலுமிச்சை!

பெண்களில் பாத அழகை கெடுப்பதில் குதிகால் வெடிப்பு ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு தரும் சிறந்த வழி...

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காய் பொரியல்!

வாரத்திற்கு ஒரு முறை நெல்லிக்காய் சாப்பிடுவதால் முகப்பொலிவு, பளப்பான சருமம் ஆகியவற்றை பெறலாம். நெல்லிக்காயை அப்படியே சாப்பிட முடியாதவர்கள் பொரியல் செய்து சாப்பிடலாம். தேவையான பொருட்கள்...

கொரோனா பாதிப்பு: ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி; திட்டம்!

உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.‌ அங்கு வைரஸ் தொற்றும் அதனால் நிகழும் மரணங்களும் மட்டுமல்லாமல் வேலை...

முகக்கவசத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும்!

கைகளை அடிக்கடி சோப்பு பயன்படுத்திக் கழுவுதல் மற்றும் ஆல்கஹால் கலந்த சானிடைசர் பயன்படுத்திக் கழுவுதல் ஆகியவற்றுடன் முகக்கவசம் அணிவதும் கட்டாயம் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். பலர் முகக்கவசம் அணிவதன்...

12 நாடுகளுக்கு பயணத் தடை | சவுதி அரேபியா எச்சரிக்கை

கொரோனா வைரஸிற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனுமதியின்றி 12 நாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது என சவுதி அரேபியா தனது மக்களுக்கு எச்சரித்துள்ளது.

ஈ.ரி.ஐ. நிறுவன பணிப்பாளர்கள் 4 பேரும் பிணையில் விடுதலை

6.480 பில்லியன் வைப்பு பணத்துடன் இரகசிய கணக்குகளை சட்டவிரோதமாக பேணியதாக கூறப்படும் விவகாரத்தில், கறுப்புப் பண சுத்திகரிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட...

சீனாவின் மாகாணமொன்று திடீர் முடக்கம்

சீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் கொரோனா பரவலை அடுத்து, திடீரென்று அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மிகவும் அத்தியாவசிய தேவை...

துயர் பகிர்வு